சுற்றுநிருபத்துக்கு அமைய நெல் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடல்!
நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்த கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் நெல் கொள்வனவு செய்வது தொடர்பாக அரசாங்கம் வெளியீட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய மாவட்டத்தில் நெல் கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை முகாமையாளர், அரிசி ஆலை உரிமையாளர்கள்,,பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர்கள் ,கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர் குறித்த கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 2,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், மாவட்டத்தில் சுமார் 30,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் உற்பத்தியை நியாயமான விலையில் விற்பனை செய்ய அரசாங்கத்தால் மீண்டும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாவட்டத்தில் உள்ள தனியார் சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கலந்துரையாடல் இன்று20.08.2026 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் 3 நெல் ஆலை உரிமையாளர்களும், தனியார் தரப்பில் 8 நெல் ஆலை உரிமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் ஊடாக விரைவாக நெல் கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், ஒவ்வொரு நெல் ஆலை உரிமையாளருக்கும் 25 மில்லியன் ரூபாய் கடன் நிதியாக வழங்கப்பட்டு, விவசாயிகள் வசமுள்ள நெல் கொள்வனவு செய்யப்படும்.
இதன் மூலம் மேலும் சுமார் 10,000 மெட்ரிக் தொன் நெல்லை விவசாயிகள் சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என தெரிவித்தார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணிய முரளிதரன் அவர்கள்இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே