புற்றுநோயாளர்களுக்கு அநீதி வேண்டாம் – பில்கிராஸ்டிம் பற்றாக்குறைக்கு தீர்வு அவசியம்!

#SriLanka #LANKA4 #cancer #Patients #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
புற்றுநோயாளர்களுக்கு அநீதி வேண்டாம் – பில்கிராஸ்டிம் பற்றாக்குறைக்கு தீர்வு அவசியம்!

புற்றுநோய் சிகிச்சைக்கு அத்தியாவசியமான பில்கிராஸ்டிம் (Filgrastim) ஊசி மருந்துக்கு அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட பல அரச வைத்தியசாலைகளில் இந்த மருந்து பற்றாக்குறையாக இருப்பதாக நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு ஊசி ரூ.17,000 முதல் ரூ.23,000 வரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பற்றாக்குறை இருப்பதை ஏற்றுக்கொண்டதுடன், பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பிரச்சினையை கண்காணித்து தீர்வு காண விசேட மருத்துவக் குழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புற்றுநோயாளர்கள் பணம் இல்லாத காரணத்தினாலோ அல்லது அரச வைத்தியசாலைகளில் மருந்து இல்லாத காரணத்தினாலோ சிகிச்சையை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4