சட்டவிரோத பயணத்தை தடுத்த பிரெஞ்சு பொலிஸார் மீது புலம்பெயர்ந்தோர் தாக்குதல்
பிரான்ஸின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முயன்ற பிரெஞ்சு காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடலோரக் காவல் படையினர் படகை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த புலம்பெயர்ந்தோர் அவர்களைத் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆங்கிலக் கால்வாய் வழியாகப் பிரிட்டனை அடைய கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கானோர் தினமும் பிரெஞ்சு கடற்கரைகளில் திரள்கின்றனர்.
பாதுகாப்புப் படையினர் படகுகளைக் பறிமுதல் செய்யவோ அல்லது கடலுக்குள் செல்வதைத் தடுக்கவோ முயலும் போது, அவர்கள் மீது கற்களை வீசியும், தடி மற்றும் கூர்மையானப் பொருட்களைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே