வட-கிழக்கு காணி விடுவிப்பு: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

#SriLanka #LANKA4 #President #release #land #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
வட-கிழக்கு காணி விடுவிப்பு: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

வட- கிழக்கில் விடுவிக்கக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு! கடந்த யுத்த காலத்தின் போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதைத் துரிதப்படுத்துவது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (20.08.2026) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4