உக்ரைனில் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா தாக்குதல் - 14 பேர் உயிரிழப்பு

#Death #Attack #Russia #Ukraine #War #LANKA4 #L4
Prasu
1 month ago
உக்ரைனில் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா தாக்குதல் - 14 பேர் உயிரிழப்பு

மத்திய உக்ரைன் நகரமான கிரிவி ரிஹ் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மீது இரண்டு ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் 22 குழந்தைகளும் அடங்குவர்.

மேலும், "ஐந்து குழந்தைகள் உட்பட 29 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை "முற்றிலும் வஞ்சகமானது மற்றும் இழிவானது" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்து கண்டித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!