லண்டனில் நகை கடையில் திருட சுரங்கம் தோண்டிய மூன்று பேர் கைது

#ARREST #Robbery #LANKA4 #Jewelry #ENGLAND #L4
Prasu
1 hour ago
லண்டனில் நகை கடையில் திருட சுரங்கம் தோண்டிய மூன்று பேர் கைது

லண்டனில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குள் சுரங்கம் தோண்டி நுழைய முற்பட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேநேரம் சுரங்கம் தோண்ட பயன்படுத்தும் கருவிகளையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெருநகர பறக்கும் படையின் விசாரணையில், இந்தக் குழு லண்டன் முழுவதும் £700,000க்கும் அதிகமான மதிப்புள்ள கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த மூவரும் கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் 23ம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4