14 வயது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்? தந்தை கைது!

#SriLanka #LANKA4 #Father #daughter #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
14 வயது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்? தந்தை கைது!

14 வயது மகளுக்கு தந்தையே பாலியல் துஷ்பிரயோகம்? – அம்பாறையில் அதிர்ச்சி சம்பவம் 14 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை கைது அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், தனது தந்தையினால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி தனது குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தாயார் பெரிய நீலாவணைப் பொலிஸாருக்கு நேற்று (15) மாலை வழங்கிய முறைப்பாட்டில், தனது மகளை அவரது தந்தை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பெரிய நீலாவணைப் பொலிஸார், சந்தேக நபரான தந்தையை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர் எனவும், மாணவியின் தாயார் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4