22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே தமிழரசுக்கட்சி முடிவு!

#SriLanka #LANKA4 #Court #Sridaran_MP #Amendment #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே தமிழரசுக்கட்சி முடிவு!

நீதிபதிகளுடைய வயது அதிகரிக்கின்ற நோக்குடன் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இதில் தமிழரசுக்கட்சி ஆதரவு வழங்குமா? இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் உங்களுடைய கருத்து என்ன? பதில் / செய்தி உரை: இலங்கையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதற்கு எதிராக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

எனவே, இந்த வழக்குகளின் விசாரணைகள் எந்த நிலைக்கு வரப்போகின்றன என்பதை தமிழரசுக்கட்சி மிக அவதானமாக அவதானித்து வருகின்றது. 

இது குறித்துக் கடந்த வாரம்Zoom வழியாகக் கட்சியின் உயர்மட்டக் குழுவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியிருந்தனர். 

அக் கலந்துரையாடலின் பிரகாரம், இத்திருத்தம் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவிதக் கருத்துக்களையோ அல்லது தீர்மானங்களையோ சொல்வதில்லை என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக, எந்த நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் முன்மொழிகிறதோ, அதே நீதிபதிகள் தான் இந்த வழக்குகளுக்கான தீர்ப்புகளையும் வழங்கவுள்ளார்கள்.

எனவே, பொறுமையுடன் காத்திருந்து நீதிமன்றத் தீர்ப்புகளை அவதானிப்பதுடன், மக்களுடைய கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னரே இது குறித்த இறுதித் தீர்மானத்தை எமது கட்சி எடக்கும். 

அதுவரை பொறுத்திருப்பதே எமது தற்போதைய நிலப்பாடாகும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4