இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழை பெய்யும் அறிகுறி
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2:00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30–40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொள்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே