விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் மூத்த விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடந்த 05ம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணை தொடர்பான தகவல்களை சமர்ப்பித்திருந்தது. இதையடுத்து, குறித்த கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்ததாக முதற்கட்டமாகத் தென்படுவதாக நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே