இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan #LANKA4 #L4
Prasu
58 minutes ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே

மேஷம்

பஞ்சம ஸ்தானத்தில் புதாதித்ய யோகம் அமைவதும், சுகஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுவதும் நன்மைகளை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணவரவு கைக்கு வந்து சேரும். 

சேமிப்பு கூடும். சுப காரியங்களுக்கான அத்தியாவசிய செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இணக்கமான சூழலும் நிலவும். 

உடன்பிறந்த சகோதரர்களின் ஆதரவு உங்கள் மன அமைதியை அதிகரிக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் தக்க சமய உதவி உங்களைக் கடினமான சூழல்களில் இருந்து காப்பாற்றும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விரிவாக்க திட்டங்கள் வெற்றி தரும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணிகளில் வேலைப்பளு இருந்தாலும் வருமான உயர்வு மனதிற்கு நிம்மதி தரும்.

ரிஷபம்

முயற்சி ஸ்தானத்தில் குரு பகவானும், லாப ஸ்தானத்தில் சனி பகவானும் சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் விரைவில் நிறைவேறும். எதிர்பாராத வழிகளில் தனவரவு பெருகி, பழைய கடன்கள் அடையும். 

வீடு, வாகனப் பராமரிப்பிற்கான செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் பாசமும் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவருடைய ஆசி கிடைக்கும். 

உறவினர்கள், நண்பர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பொதுவாழ்வில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்து லாபம் பெருகும். 

வெளிநாட்டுத் தொடர்புகள் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றமும் நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் கிடைக்கும். மறைமுகப் போட்டிகளை சமாளித்து முன்னேறுவீர்கள்.

மிதுனம்

தன ஸ்தானத்தில் உச்சம் பெற்ற குரு பகவானும், சப்தம ஸ்தானத்தில் சந்திரனும் இருப்பதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். 

ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கான திட்டமிட்ட செலவுகளும் மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். 

கணவன்-மனைவி இடையேயான மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். 

நண்பர்கள் வழியாக சுபச் செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் மக்கள் ஆதரவும் செல்வாக்கும் உயரும். தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், கலைத்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

ராசியிலேயே உச்ச குரு அமர்ந்திருப்பது யோக அமைப்பாகும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பல வழிகளில் வருமானம் பெருகி சேமிப்பு உயரும். 

பணப்புழக்கம் கிடைப்பதுடன், ஆன்மீக மற்றும் தர்ம காரியங்களுக்காக மகிழ்ச்சியுடன் செலவிடுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.

பிரிந்திருந்த தம்பதியினரும் உறவினர்களும் மீண்டும் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். 

நண்பர்களின் ஆதரவால் பொதுவாழ்வில் செல்வாக்கும் மரியாதையும் பலமடங்கு உயரும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் எளிதாகக் கைகூடும். 

உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வேலைப்பளு குறைந்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உற்பத்தி, சேவைத் துறையினருக்கு எதிர்பாராத அளவில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

சூரியன் சொந்த ராசியில் புதாதித்ய யோகத்தை உருவாக்குவதால் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகள் குவியும். பணவரவு அதிகரித்து நிலுவைத் தொகைகள் கைக்கு வரும். 

தொழில் விரிவாக்கம், புதிய சொத்துக்கள் வாங்குதல் போன்ற சுபச் செலவுகளும் ஏற்படும். தந்தை வழி நன்மைகளும் சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். 

உறவினர்களிடையே உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்வீர்கள். 

பொதுவாழ்வில் தலைமைப் பண்பு வெளிப்படும். அரசுத் துறை, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும். 

வியாபாரத்தை புதிய சந்தைகளுக்கு விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்ப்புகளையும் போட்டிகளையும் திறமையாகச் சமாளித்து சாதனை படைப்பீர்கள்.

கன்னி

லாப ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் குரு பகவான் அமர்ந்திருப்பதால் யோகபலன் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவடைந்து பல வழிகளில் வருமானம் பெருகும். 

கடன் சுமைகள் படிப்படியாகக் குறையும். எதிர்காலத் திட்டங்கள், தொழில் முதலீடுகள் மற்றும் சேமிப்புகளுக்காகச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். 

உற்றார் உறவினர்களின் ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்கும். நண்பர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். 

பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் சமூக மரியாதையும் அதிகரித்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். 

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

துலாம்

லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் இணைந்து சுபயோகத்தை உருவாக்குவதும், ஆறாம் ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதும் எதிரிகளை வெல்லும் ஆற்றலை அளிக்கும். 

எதிர்பாராத தனலாபமும் தொழில் வருமானமும் அதிகரிக்கும். வசதிகள், ஆடம்பரப் பொருட்களுக்கான செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். 

மூத்த சகோதரர்களின் உதவி மனநிம்மதியை அளிக்கும். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை மதிப்பார்கள். நண்பர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். 

பொதுவாழ்வில் செல்வாக்கும் மதிப்பும் மேலும் உயரும். தொழில், வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். பங்குச்சந்தை, கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

உத்தியோகத்தில் நிலுவைத் தொகைகளும் பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் விலகி பணிகள் சுமுகமாக நடைபெறும்.

விருச்சிகம்

பத்தாம் வீட்டில் சூரியன்–புதன் சேர்க்கையால் கர்ம ஜீவன யோகம், பாக்கிய ஸ்தானத்தில் உச்ச குரு பார்வையால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

நிதிநிலை வலுப்பெற்று பழைய கடன்கள் வசூலாகும். சுப நிகழ்ச்சிகள், புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான செலவுகளும் மகிழ்ச்சியுடன் நடைபெறும்.

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தந்தை வழியில் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உற்றார் உறவினர்கள் பாராட்டுவார்கள். 

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் அங்கீகாரமும் கிடைத்து செல்வாக்கு உயரும். அரசுப் பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். 

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அதிகாரப் பொறுப்பு கிடைக்கும். பணியிடத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றப் பாதை திறக்கும்.

தனுசு

ராசியில் சந்திரனும், மூன்றில் ராகுவும் இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாக்கிய ஸ்தான சூரியன்–புதன் சேர்க்கை யோகம் தரும். 

எதிர்பாராத பணவரவு கிடைத்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட தூரப் பயணங்கள், தர்ம காரியங்களுக்காகச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். 

தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் எதிர்பார்த்த உதவிகளைச் செய்வார்கள். 

பொதுவாழ்வில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து புதிய அறிமுகங்கள் நன்மை தரும். கட்டுமானம், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 

உத்தியோகத்தில் சவால்களை எளிதாக சமாளித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மகரம்

களத்திர ஸ்தானத்தில் குருவின் பார்வை, மூன்றில் வக்ர சனி இருப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். உழைப்புக்கேற்ற தனவரவு அதிகரிக்கும்.

கடன் சுமைகள் குறையும். மருத்துவம் மற்றும் திடீர் பயணங்களுக்காகச் செலவுகள் ஏற்பட்டாலும் பணப்பற்றாக்குறை உருவாகாது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். 

வாழ்க்கைத்துணையின் ஆதரவு உற்சாகம் தரும். உற்றார் உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைத்து மதிப்பும் செல்வாக்கும் உயரத் தொடங்கும். வியாபாரத்தில் நிலுவைத் தொகைகள் வசூலாகும். 

வெளிநாட்டுத் தொடர்புகள் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். புதிய வேலை முயற்சிகளும் சாதகமாக அமையும். பணியிடத்தில் இருந்த சிரமங்கள் படிப்படியாக விலகும்.

கும்பம்

சப்தம ஸ்தானத்தில் சூரியனும் புதனும் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்குவதால் யோகபலன் அதிகரிக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் மூலம் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். 

வருமானம் தாராளமாக இருக்கும். குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்காக மகிழ்ச்சியுடன் செலவிடுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். 

கணவன்-மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பெருகும். நண்பர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். 

பொதுவாழ்வில் மதிப்பும் மக்களின் ஆதரவும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய கூட்டாண்மை ஒப்பந்தங்கள் கைகூடும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் லாபம் உயரும். 

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

பூர்வ புண்ணிய ஸ்தான குரு, ஆறாம் ஸ்தான சூரியன் வெற்றிகளையும் எதிரி ஜெயத்தையும் அளிக்கும். பல வழிகளில் வருமானம் பெருகி நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். 

கடன் அடைத்தல், ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கான செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும். 

பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை சேர்க்கும். உற்றார் உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். நண்பர்கள் தேவையான உதவிகளைச் செய்வார்கள். 

பொதுவாழ்வில் உங்கள் புகழும் மரியாதையும் மேலும் பரவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். புதிய உத்திகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள், புகார்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். அதிகாரிகளின் பாராட்டும் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உருவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4