ஈரான்–ஓமன் பேச்சு: ஹோர்முஸ் வழித்தடம் மீண்டும் திறக்குமா?

#world_news #LANKA4 #Reopen #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
ஈரான்–ஓமன் பேச்சு: ஹோர்முஸ் வழித்தடம் மீண்டும் திறக்குமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான "கூட்டு தற்காலிக வழித்தடத்தை" உருவாக்குவது குறித்தும், அந்தப் பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்தும் ஈரானும் ஓமானும் விவாதித்துள்ளன.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதரகங்களுக்கு மீண்டும் பணியாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

அத்துடன் டொனால்ட் ட்ரம்பின் இளைய மகன் பேரான் டிரம்ப் குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சர்ச்சைக்குரிய காணொளி குறித்து அமெரிக்காவின் ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!