கிளிநொச்சியில் நெற்செய்கை வயல்களில் சட்டவிரோத மணல் அகழ்வு – விவசாயிகள் கவலை!
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலையப் பிரிவில், நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எவ்வித அனுமதியும் இன்றி, இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், பொலிஸாருக்கு தெரியாமல் தொடர்ந்து மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மணல் அகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்தால் எதிர்வரும் பெரும் போக நெற்செய்கையில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே