நிலாவெளியில் உருவாகும் பவள ஆராய்ச்சி மையம்!
திருகோணமலையில் உருவாகும் புதிய பவள ஆராய்ச்சி மையம்!
திருகோணமலை நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இலங்கையின் கடல் சூழலியல் மற்றும் பவளப் பாறைகள் குறித்து அறிந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
மையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் பவளப் பாதுகாப்பு, மீளுருவாக்கம் மற்றும் கடல் உயிரினப் பல்வகைமை தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், பவள இனங்கள் மற்றும் கடல் சூழலியல் அமைப்புகள் தொடர்பான அறிவியல் ஆய்வுகளுக்கான முக்கிய தளமாகவும், பவளப் பாறைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மையமாகவும் இது செயற்படவுள்ளது.
கடல் வளங்களை நிலையான முறையில் பாதுகாப்பதுடன், எதிர்கால தலைமுறைகளுக்காக கடல் சூழலியல் அமைப்புகளைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதேபோன்ற கடல் உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே