கெபித்திகொல்லேவ பகுதியில் கோர விபத்து – 10 நாள் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #people #LANKA4 #baby #Died #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
கெபித்திகொல்லேவ பகுதியில் கோர விபத்து – 10 நாள் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

அநுராதபுரம், கெபித்திகொல்லேவ – கோனமரியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பதவிய ஸ்ரீபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெபித்திகொல்லேவ நோக்கிச் சென்ற கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாயார் மற்றும் 10 நாள் பச்சிளம் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கெபித்திகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4