கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப் - பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு

#PrimeMinister #CANADA #America #government #LANKA4 #L4 #DonaldTrump
Prasu
3 hours ago
கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப் - பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு

கனடாவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நீர்நிலைக்குப் பெயர் மாற்றம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரி என மாற்றும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்தப் பெயர் மாற்றம் "உடனடியாக அமலுக்கு வரும்" என்று ஜனாதிபதி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ராறியோ ஏரியின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.

இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான ஒன்ராறியோ ஏரியை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4