மறைந்த நோர்வே மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் இரங்கல்
நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். "நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
நோர்வே நாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தமைக்காக அந்நாட்டு மக்கள் அவருக்கு ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உள்ளனர்” என்று நோர்வே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
"மன்னர் ஹரால்ட் கண்ணியம், ஞானம் மற்றும் தனது நாட்டிற்கான அசையாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவமாகத் திகழ்ந்தார்” என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“விவேகத்திற்கும் ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு மாபெரும் தலைவரை நோர்வே இழந்துள்ளது” என ஜெர்மனி சேன்சலர் பிரீட்ரிச் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
எக்காலத்திலும் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் பேணுவதில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக மன்னர் ஹரால்ட் என்றும் நினைவுகூரப்படுவார்” என பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே