ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோரின் இரட்டைக் குழந்தைகள்!

#world_news #LANKA4 #twins #Parents #Birth #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோரின் இரட்டைக் குழந்தைகள்!

அவுஸ்திரேலியாவில் மாற்றுத்தாய் மூலம் கருவுற்ற பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குச் சொந்தமான இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள அரிதான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதிக்காக மாற்றுத்தாயாக இருந்த நிலையில், அதே காலப்பகுதியில் தனது கணவருடனும் இயற்கையாகக் கருத்தரித்துள்ளார்.

இதன் மூலம் பிறந்த பெண் குழந்தை மாற்றுத்தாய்மை கோரிய தம்பதியினருக்கும், ஆண் குழந்தை மாற்றுத்தாய் மற்றும் அவரது கணவருக்கும் உயிரியல் ரீதியாகச் சொந்தமானது என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் ஏற்பட்ட நிலையில், குயின்ஸ்லாந்து சிறுவர் நீதிமன்றம் இரு குழந்தைகளையும் தனித்தனி குடும்பங்களின் சட்டப்பூர்வ பராமரிப்பில் வளர்க்க அனுமதித்துள்ளது.

இரு குடும்பங்களும் குழந்தைகள் வளர்ந்த பின்னர் அவர்களின் பிறப்பு குறித்த உண்மையைத் தகுந்த வயதில் விளக்குவதுடன், தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!