யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – நடவடிக்கை கோரி செனட் மகா சபையிடம் முறைப்பாடு
யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 29: தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் வணக்கத்துக்குரிய அன்டனி செபஸ்டியன் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த CSIMLA சமூகம் தென்னிந்திய திருச்சபை செனட் மகா சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தாக்குதல் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்குள்ளான போதகர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர், தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளர் போதகர் சதீஸ் டானியலின் மகன் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்றின்போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாண ஆதீனத்தின் நிர்வாகம், நிதி நடவடிக்கைகள் மற்றும் திருச்சபை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து போதகர் அன்டனி செபஸ்டியன் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இவ்விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
எடுக்க வேண்டும் என CSIMLA சமூகம் தென்னிந்திய திருச்சபை செனட் மகா சபையின் செயலாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே