22ஆவது திருத்தம்: சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ஆதரவு!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கும், அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது.
நீதித்துறை சுதந்திரம், சட்டவாட்சி, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பது அனைத்து குடிமக்களினதும் கூட்டுப் பொறுப்பு என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதியரசர்களின் பதவிக்காலம் அல்லது ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது சாதாரண நிர்வாகத் திருத்தம் அல்ல எனவும், இத்தகைய மாற்றங்கள் நீதித்துறை சுதந்திரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டவாட்சியைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே