நுவரெலியாவில் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவர்
#SriLanka
#ARREST
#Murder
#NuwaraEliya
#LANKA4
#family
#L4
Prasu
5 hours ago
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில் 43 வயதுடைய பெண் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
சித்ரா தேவி என்ற பெண் 32 வயதுடைய கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் கணவர் தான் தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே