சைப்ரஸில் 270 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு

#Death #Accident #LANKA4 #Boat #Rescue #Missing #Cyprus #L4
Prasu
1 month ago
சைப்ரஸில் 270 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு

வடக்கு சைப்ரஸ் கடற்கரைக்கு அருகே, சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 237 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 22 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வடக்கு சைப்ரஸ் பிரதமர் உனால் உஸ்டெல் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான வானிலையை எதிர்கொண்டதால், படகு புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இனரீதியாகப் பிரிக்கப்பட்ட சைப்ரஸின் பிரிந்து சென்ற வடக்குப் பகுதியில் உள்ள கைரேனியா (கிர்னே என்றும் அழைக்கப்படுகிறது) துறைமுகத்திலிருந்து, மெர்சின் மாகாணத்தில் உள்ள துருக்கிய துறைமுகமான தசுசுவுக்கு அந்த கேடமரன் வகை படகு பயணித்துக் கொண்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!