இராமநாதபுரம் ஐயனார் கோவில் நடன நிகழ்வுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - பாடகர் கோகுலன் சாந்தன் விளக்கம்

#SriLanka #Temple #Kilinochchi #Women #LANKA4 #Singer #Religion #dance #cultural #L4
Prasu
1 hour ago
இராமநாதபுரம் ஐயனார் கோவில் நடன நிகழ்வுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - பாடகர் கோகுலன் சாந்தன் விளக்கம்

கிளிநொச்சி இராமநாதபுரம் ஐயனார் ஆலயத் தேர்த்திருவிழாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இசைக்குழு சார்பில் பாடகர் கோகுலன் சாந்தன் அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் ஐயனார் ஆலயத் தேர்த்திருவிழாவில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் என்னையும் எனது இசைக்குழுவையும் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் தவறான விமர்சனங்களும் வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளமை மனவேதனையளிக்கிறது.

அன்றைய தினம் திருவிழா உபயகாரரின் வேண்டுகோளுக்கிணங்க, பாரம்பரிய வேட்டி–சட்டை அணிந்து ஐயனாரின் பக்திப் பாடல்களைப் பாடியதே எமது பங்களிப்பு. 

சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஏனைய நிகழ்வுகளுடன் எமக்கு தொடர்பில்லை. நாங்கள் தொழில்முறைக் கலைஞர்கள். ஆலய நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

எமது பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களின் எல்லைகளை மதித்தே தொடர்ந்து கலைச்சேவை செய்து வருகிறோம். இசை நிகழ்ச்சிகளை நம்பி இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாது, ஒலி–ஒளி அமைப்பாளர்கள், மேடை அமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்கள் என பல குடும்பங்கள் வாழ்கின்றன.

விமர்சியுங்கள்; தவறுகளை நாகரிகமாகச் சுட்டிக்காட்டுங்கள். தவறு இருந்தால் திருத்திக்கொள்கிறோம். ஆனால் எமது குடும்பத்தினரை இழிவுபடுத்துவதையும் உண்மை அறியாமல் வதந்திகளைப் பரப்புவதையும் தவிருங்கள்.

ஆலய நிர்வாகங்களின் சீரான வழிகாட்டுதல்களுடன் எமது கலைச்சேவையைத் தொடர்ந்து வழங்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4