விவசாயிகளின் நலன் குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துரையாடல்

#India #LANKA4 #Vijay #Farmer #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
விவசாயிகளின் நலன் குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துரையாடல்

மேட்டூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்த பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்று (செப்டெம்பர் 1) காவிரி டெல்டா பகுதிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்த முதலமைச்சர், பின்னர் சின்னக்காவூர் பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்தார். 

அப்போது அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்ததுடன், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். 

அப்பகுதிகளின் விவசாய நிலைமை, பாசன வசதிகள் மற்றும் விவசாயப் பணிகள் தொடர்பாக விவசாயிகளிடம் நேரடியாகக் கேட்டறிந்தார்.

விவசாயிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாகக் கேட்டறிந்த முதலமைச்சர், அவர்களின் நலன் மற்றும் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான பாசனத் தேவையையும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையையும் கருத்திற்கொண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் விவசாயிகள் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4