கிளிநொச்சியில் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண விசேட நடவடிக்கை!

#SriLanka #Kilinochchi #LANKA4 #land #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கிளிநொச்சியில் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண விசேட நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் காணி தொடர்பான 5 ஆண்டுச் செயலாற்றுகை குறித்து விசேட மீளாய்வுக் கூட்டம் இன்று (02.09.2026) மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, 25 மாவட்டங்களிலும் காணிப் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் கிராம சேவகர் பிரிவு ரீதியாக காணிப் பிரச்சினைகளை பொறுப்புடன் கையாள்ந்து தீர்வுகளை ஏற்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் முன்னெடுக்கப்பட்ட காணி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அனைத்து அதிகாரிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4