6 நாட்களில் 100 மீட்புப் பணிகள்: கவனம் ஈர்த்த நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன்!
நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 6 நாட்களில் சுமார் 100 மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ரசுவா மற்றும் திமுரே பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகளில் ராணுவத்தின் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், முதல் இரண்டு நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக பிரியா அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அறிவியல் பயின்ற அவர், விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர் பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் இயக்கப் பயிற்சி பெற்றார்.
2017ஆம் ஆண்டு முழுநேர ஹெலிகாப்டர் விமானியாக பணியில் இணைந்தார்.
இமயமலைப் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவர், 6,200 மீற்றர் உயரம் வரையிலும் ஹெலிகாப்டரை இயக்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே