மக்கள் பிரச்சினைகள் கூட்டங்களில் மட்டுமல்ல, நடைமுறையிலும் தீர்க்கப்பட வேண்டும்!

#SriLanka #Meeting #people #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மக்கள் பிரச்சினைகள் கூட்டங்களில் மட்டுமல்ல, நடைமுறையிலும் தீர்க்கப்பட வேண்டும்!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (02.09.2026) பிரதேச செயலாளர் உதயசிறிதர் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, விளையாட்டு மைதானங்கள் மற்றும் காணி விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பெரியகல்லாறு மற்றும் கோட்டைக்கல்லாறு விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வது, பெரியகல்லாறு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, களுதாவளை குறைந்த மின்னழுத்தப் பிரச்சினையை சரிசெய்வது மற்றும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேலும், கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான பகுதிகளில் Beacon Light பொருத்துவதற்கான கோரிக்கையை கடற்றொழில் அமைச்சிடம் முன்வைக்குமாறும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

“ஒரு பிரச்சினை கூட்டத்தில் பேசப்பட்டதா என்பது முக்கியமல்ல; அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததா என்பதே முக்கியம்” என வலியுறுத்தப்பட்டதுடன், மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4