புலமைப்பரிசில் பெறுபேறு காரணமாக சிறுவர்களை துன்புறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

#SriLanka #children #LANKA4 #Harassment #Legal #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
புலமைப்பரிசில் பெறுபேறு காரணமாக சிறுவர்களை துன்புறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை காரணம் காட்டி சிறுவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

சிறுவர்களின் பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து அவர்களை அவமானப்படுத்துதல் அல்லது மற்றவர்களுடன் ஒப்பிட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை விட சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4