கனடாவில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது ஓடி கின்னஸ் சாதனை படைத்த நாய்
கனடாவின் எட்மண்டன் பகுதியில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் ஓடி, தாவிக் கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த பெண் நாய் புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிபர் பிரேசர் என்பவர் இந்த நாயை வளர்த்து வருகிறார்.
நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சியில் அனுபவம் கொண்ட ஜெனிபர், ‘சார்டோன்’ பெயர் கொண்ட நாயின் தனித்திறமையை அடையாளம் கண்டு, இந்த உலக சாதனைக்காக அதற்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார்.
கடந்த ஜூன் 14ம் திகதி கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள ‘எட்மண்டன் ரிவர்ஹாக்ஸ்’ பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்த சாதனை தொடர்பான முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழையும் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே