இலங்கை பொலிஸின் 160ஆவது ஆண்டு நிறைவு: போதைப்பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம்!

#SriLanka #Police #LANKA4 #Anniversary #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
இலங்கை பொலிஸின் 160ஆவது ஆண்டு நிறைவு: போதைப்பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம்!

இலங்கை பொலிஸின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திம்பிரிகஸ்யாய பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, கடந்த 160 ஆண்டுகளாக நாட்டின் அமைதி, சட்டம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை பொலிஸ் ஆற்றிய சேவை பாராட்டப்பட்டது.

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களை கட்டுப்படுத்துவது தற்போது பொலிஸாரின் முக்கிய பொறுப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், இதனை சமூகப் பொறுப்பாகக் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மற்றும் கைதுகள் பாராட்டப்பட்டதுடன், வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 74 சந்தேகநபர்கள் சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறித்தும் குறிப்பிடப்பட்டது.

இதேவேளை, இலங்கை பொலிஸ் சேவையை மேலும் கௌரவத்துக்குரிய சேவையாக மாற்றும் வகையில் புதிய பதவி உயர்வு முறைமை, புதிய சீருடை, ஆபத்துக் கொடுப்பனவு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பொலிஸ் துறையில் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4