எல் நினோ தாக்கம் 2027 வரை நீடிக்கலாம் – இலங்கையில் கடும் வறட்சி!
உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை தாக்கம் 2027 பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால் இலங்கையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரை பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு, விவசாய பாதிப்பு மற்றும் பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான ராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் நீர்வரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளது.
நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் மட்டுமன்றி, கால்நடைகளுக்கான புல் மற்றும் நீர் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமத்தால் பால் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எல் நினோ தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் மேற்பரப்பு மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் கடும் வறட்சி உள்ளிட்ட தீவிர காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே