கல்லூரி சேர்க்கையில் சாதி, மத அடையாளம் கட்டாயமில்லை!
#India
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
56 minutes ago
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது சாதி மற்றும் மத அடையாளங்களை கட்டாயமாக குறிப்பிட வேண்டியதில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் சாதி மற்றும் சமூகப் பின்னணி விவரங்களை கட்டாயமாகக் கேட்பது பாகுபாட்டுக்கு வழிவகுக்கக்கூடும் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போதே அரசு இந்த நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களை சாதி மற்றும் மத அடையாளங்களை குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்ற ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே