இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
#India
#SriLanka
#Colombo
#Visit
Thamilini
2 hours ago
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கை தலைவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார். அத்துடன், பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவுடனும் அவர் பேச்சு நடத்துவார்.
இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் அடங்கும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே