நேபாளத்தில் 09 நாட்களின் பின் சேற்று மண்ணில் இருந்து இருவர் மீட்பு

#SriLanka #world_news #Nepal #Rescue
Thamilini
2 hours ago
நேபாளத்தில் 09 நாட்களின் பின் சேற்று மண்ணில் இருந்து இருவர் மீட்பு

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, திரிசூலி 3A நீர்மின் நிலையத்தில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.

 சேறு படிந்த நிலையில் இரு தொழிலாளர்கள் மீட்கப்பட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 இந்த மீட்பு நடவடிக்கை, மேலும் பலர் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 45 வயதான கபீர் மஹர்ஜன் மற்றும் 30 வயதான சஞ்சய் சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 அவர்களிடம் இருந்து கிடைகப்பெற்ற தகவலின்படி, சுரங்கப்பாதையில் இன்னும் 40 பேர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து நேபாள இராணுவம் தலைமையிலான பாதுகாப்புக் குழு, சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4