கொழும்பு துறைமுக நகர கடத்தல் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது!

#SriLanka #Colombo #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
54 minutes ago
கொழும்பு துறைமுக நகர கடத்தல் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது!

கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் சீன பிரஜையொருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 54 வயதுடைய பிரதான சீன சந்தேகநபர் ஒருவர் மாறுவேடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செயற்கை தலைமுடி அணிந்து மாறுவேடத்தில் இருந்த அவர், சம்பவம் இடம்பெற்று 43 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு துறைமுக நகரப் பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மேலும் நான்கு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4