கருணைக்கொலை கோரிய கனடிய நகைச்சுவை நடிகையின் மனு நிராகரிப்பு
#CANADA
#CourtOrder
#Actress
#Women
#LANKA4
#Euthanasia
#L4
Prasu
53 minutes ago
மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதல் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026ல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும் சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே