நாடுகளின் உண்மையான அளவை காட்டும் புதிய உலக வரைபடம் – ஐ.நா. தீர்மானம்!

#world_news #UN #LANKA4 #true #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
நாடுகளின் உண்மையான அளவை காட்டும் புதிய உலக வரைபடம் – ஐ.நா. தீர்மானம்!

நூற்றாண்டுகளாக நிலவிவரும் புவியியல் அளவீட்டுப் பிழைகளைத் திருத்தும் நோக்கில், நாடுகளின் உண்மையான ஒப்பீட்டு அளவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.

ஆபிரிக்க நாடுகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் பஹாமாஸ் நாடுகளால் முன்மொழியப்பட்ட "வரைபடத்தைத் திருத்துங்கள்" (Correct the Map) என்ற இந்தத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.

வாக்கெடுப்பில் 164 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன; 6 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தன. அமெரிக்கா மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தது.

உலகப் பிராந்தியங்களின், குறிப்பாக ஆபிரிக்கா மற்றும் தெற்காசியப் பகுதிகளின் உண்மையான அளவுகளைச் சரியாகக் காட்டுவதும், 1569ஆம் ஆண்டில் ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட மெர்கேட்டர் வரைபட முறையில் உள்ள திசைமாற்றப் பிழைகளைக் களைவதும் இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த மெர்கேட்டர் முறையில் நிலநடுக்கோட்டிலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல நாடுகளின் பரப்பளவு பெருப்பிக்கப்பட்டு காட்டப்படுகிறது.

உதாரணமாக, கிரீன்லாந்து, ஆபிரிக்காவைப் போலப் பெரியதாக இதில் காட்டப்படுகிறது, ஆனால் உண்மையில் ஆபிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது.

மேற்கூறிய முரண்பாடுகளைக் களைந்து, உலகின் பல்வேறு பிராந்தியங்களின் உண்மையான பரப்பளவு மேற்பரப்பைத் துல்லியமாக சித்தரிக்கும் 'சமமான பூமி' (Equal Earth Projection) வரைபட முறைக்கு மாறுவதை இந்தத் தீர்மானம் ஊக்குவிக்கிறது.

பிரிக்க ஒன்றியத்தின் இந்த முயற்சியை வரவேற்றுள்ள பிரான்ஸ், தனது வெளிவிவகார அமைச்சர் சான்-நொவல் பாரோ வாயிலாக இனி மெர்கேட்டர் வரைபட முறையைக் கைவிட்டு, உண்மையான பரப்பளவைக் காட்டும் முறைகளைப் பின்பற்றுவதாக அறிவித்துள்ளது.

மேலும், கூகுள் மெப்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களும் இந்தத் துல்லியமான வரைபட முறைகளைப் பரிசீலிக்க வேண்டும் என இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகளின் இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக எந்த நாட்டையும் கட்டாயப்படுத்தாவிட்டாலும், கல்வி நிலையங்கள், ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்களில் முறையான மற்றும் துல்லியமான புவியியல் பார்வையைப் பரப்ப இது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4