பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த ஆடை வடிவமைப்பாளரும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியுமான ஜாய் கிரிசில்டா
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பார்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் இந்த வாரம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் அதாவது செப்டம்பர் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பிக் பாஸ் 10 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 21 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு ஆடை வடிவமைப்பாளரும், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியுமான ஜாய் கிரிசில்டா விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, "நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குழந்தை ராகா இன்னும் மிகவும் சிறியவன்.
அவனை விட்டுவிட்டு செல்வது சரியாகத் தோன்றவில்லை.
எனவே இந்த வாய்ப்பை நிராகரித்தேன்; என்னைப் பொறுத்தவரை என் குழந்தைதான் முன்னுரிமை (Priority)" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே