நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தில் புதிய அரசியல் நகர்வு!

#SriLanka #ARREST #LANKA4 #Breakingnews #family #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தில் புதிய அரசியல் நகர்வு!

அரசியல் களத்தில் களமிறங்கப் போகிறாரா நாமலின் மனைவி லிமினி?

நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மனைவி அதிரடியாக அரசியலில் களமிறங்கத் தயாராகிறாரா?

ராஜபக்ஷ குடும்பத்தில் அரசியலுக்குள் பிரவேசிக்கும் முதல் பெண்ணாக நாமல் ராஜபக்ஷவின் மனைவி களமிறங்குவாரா? அரசியலில் அவருக்கு வெற்றி கிடைக்குமா?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, எதிர்காலத்தில் செயற்பாட்டு அரசியலில் நேரடியாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணி நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், அவர் தற்போது விளக்கமறியலில் இருப்பதால், லிமினி ராஜபக்ஷ தலைமையில் பேரணியை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எதிர்வரும் நாட்களில் கொழும்பிலும் லிமினி தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவும், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் லிமினி ராஜபக்ஷ எதிர்காலத்தில் செயற்பாட்டு அரசியலில் நேரடியாக களமிறங்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

 ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் களத்தில் புதிய பெண் முகமாக லிமினி களமிறங்கப் போகிறாரா?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4