பிற்பகல் வேளையில் வானிலையில் மாற்றம் - இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு

#SriLanka #weather #Rain #Meteorology
Thamilini
50 minutes ago
பிற்பகல் வேளையில் வானிலையில் மாற்றம் - இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கமைய இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4