மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம் - 05 பேர் உயிரிழப்பு

#SriLanka #Airport #world_news #PlaneCrash
Thamilini
58 minutes ago
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம் - 05 பேர் உயிரிழப்பு

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், அமேசான் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 05 காயமடைந்துள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 

விமானி மற்றும் துணை விமானி விமானத்தின் காக்பிட்டில் சிக்கிக்கொண்டதுடன், மேலும் சிலர் கார்களில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4