இந்தோனேசியாவில் 08 விமான நிலையங்களில் சேவை பாதிப்பு - 1,500 விமானங்கள் இரத்து
#SriLanka
#Flight
#Indonesia
#service
#volcano
Thamilini
1 hour ago
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததை தொடர்ந்து 08 விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலைச் சாம்பல் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் வரை வியாபித்ததாக கூறப்படுகிறது.
ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்தில் மட்டும் 964 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எட்டு விமான நிலையங்களிலும் பாதிக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளது, இதில் 1,70,000 பயணிகள் பயணித்துள்ளனர் என்று அமைச்சகம் கூறியது.
அதேநேரம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ், ஏர்ஏசியா மற்றும் லயன் ஏர் குரூப் ஆகியவை அன்றைய தினம் முழுவதும் ஜகார்த்தாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாகக் கூறியுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே