கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிப்பு
#SriLanka
#prices
#America
#War
#Iran
#crude oil
Thamilini
1 hour ago
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால், கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல், 96.80 அமெரிக்க டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 92.14 டொலராகவும் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் "அங்கீகரிக்கப்படாத" பாதையைப் பயன்படுத்திய, அமெரிக்காவுடன் தொடர்புடைய மூன்று கப்பல்கள் மற்றும் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே