பிரபல மைக்ரோ கடன் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

#SriLanka #Bank #LANKA4 #company #Breakingnews #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
பிரபல மைக்ரோ கடன் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இலங்கையில் பிரபலமான தனியார் மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

“Green வாழ்க்கை” என்ற பெயரில் இயங்கும் நிறுவனம் தொடர்பில் பரபரப்பு! 

நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் குறித்த தனியார் மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களுக்கு சிறு கடன்கள் மற்றும் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், கடன்களுக்கு அதிக வட்டி மற்றும் கட்டணங்களை வசூலிப்பதாக நீண்டகாலமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும், நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கடந்த பல மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் மற்றும் எந்த அதிகாரசபையின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

குறிப்பு: நிறுவனம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியவை. 

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விளக்கத்தையும் எதிர்பார்க்கிறோம்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4