2029 ஜனாதிபதி தேர்தலை தனிக் குதிரை பந்தயமாக்க அரசாங்கம் முயற்சி - உதய கம்மன்பில குற்றச்சாட்டு

#SriLanka #Election #government #Namal Rajapaksha #Udaya Kammanpila
Thamilini
2 weeks ago
2029 ஜனாதிபதி தேர்தலை தனிக் குதிரை பந்தயமாக்க அரசாங்கம் முயற்சி - உதய கம்மன்பில குற்றச்சாட்டு

2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சர்வதிகார போக்கில் ஈடுபட்டு வருவதாகப் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவை நேற்று (07)  பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தனக்கு அச்சுறுத்தலாக அமையாத குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு, தனக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏதேனும் ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக குறிப்பிட்டார். 

ஜனாதிபதியின் நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரையும் சிறைக்குள் அடைக்கும் வழிமுறைகள் குறித்தே விரிவாகப் பேசப்பட்டுள்ளது என்றும், 2050 ஆம் ஆண்டு வரை வேறு அரசாங்கங்கள் வராது என்றும் அவர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!