ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் - விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (08) இலங்கைக்கு வரவிருக்கிறார்.
ராஜ்நாத் சிங் இன்று முதல் 10ஆம் திகதிவரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
இந்தப் பயணத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சம்பத் துய்யகொந்த ஆகியோரை சந்திக்க உள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் செயலாக்கம் இந்தப் பயணத்தின் போது ஆய்வு செய்யப்படும் என்று இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தருவதையொட்டி கொழும்பு நகரில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளும் காலத்தில் கொழும்பு நகரின் பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அது மேலும் குறிப்பிடுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே