நாடு முழுவதும் வறண்ட வானிலை - 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Dry weather
Thamilini
8 hours ago
தற்போதைய வறண்ட வானிலையால் ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இதற்கமைய 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 1,15,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் விநியோகிக்க தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஏழு மாவட்டங்களில் உள்ள 34,628 குடும்பங்களைச் சேர்ந்த 1,13,406 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே