போர்க்களத்தில் சீனாவின் மனிதவடிவ ரோபோக்கள்!

#China #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
7 hours ago
போர்க்களத்தில் சீனாவின் மனிதவடிவ ரோபோக்கள்!

சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், இந்த ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும், போர்க்களங்களிலும் பயன்படுத்தும் ஆய்வுகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) அதிகாரப்பூர்வ செய்தித்தாளான 'PLA டெய்லி', ஆய்வகங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை இராணுவ பயன்பாட்டுக்கு விரைந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

உலகளவில் உற்பத்தியாகும் மனிதவடிவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதத்தை சீன நிறுவனங்களே தயாரிக்கின்றன. 

இந்த வணிக ஆதிக்கத்தை இராணுவப் பயன்பாட்டிற்கும் சீனா பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே, கட்டடங்கள், சுரங்கங்கள் மற்றும் கப்பல்களுக்குள் எதிரிகளை எதிர்கொள்ளும் வகையில், மனித வீரர்களுடன் இணைந்து செயல்படும் 'போர்க்கள ரோபோக்களை' (Combat Robots) உருவாக்கும் திட்டங்களை சீன இராணுவ ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். 

இந்தநிலையில், நொரின் கோ (Norinco) என்ற அரசுடமை பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள 'புசி' (Fuxi) போன்ற ரோபோக்கள், மனிதர்களின் தொலைதூரக் கட்டுப்பாட்டு மூலம் (teleoperation system) கண்காணிப்பு பணி மற்றும் ஆபத்தான பணிகளைச் செய்யக்கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்க இராணுவமும் கடந்த ஆண்டு இதுபோன்ற 'இராணுவ மனிதவடிவ ரோபோ' (militarized humanoid capabilities) திட்டங்களுக்கான போட்டிகளைத் தொடங்கியுள்ளது. 

இருப்பினும், ரோபோ தயாரிப்பில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4