இளவரசர் ஹாரி மற்றும் மேகன் குறித்து கடிதம் வெளியிட்ட மன்னர் சார்லஸ்

#LANKA4 #Prince Harry #KingCharles #ENGLAND #family #L4
Prasu
4 hours ago
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் குறித்து கடிதம் வெளியிட்ட மன்னர் சார்லஸ்

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் இங்கிலாந்துக்குத் திரும்பியுள்ளதால், அவர்கள் இனி அரச குடும்பத்தின் பணிபுரியும் உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள் என்று மன்னர் சார்லஸ் சார்பாக அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரகள் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தங்கள் குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லில்லிபெட்டுடன் கலிபோர்னியாவிலிருந்து திரும்பிய இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் "மாண்புமிகு இளவரசர் மற்றும் இளவரசி" என்ற பட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றும் தனிப்பட்ட குடிமக்களாகவே நீடிப்பார்கள் என்றும் அரண்மனையின் உயர் அதிகாரியான லார்ட் சேம்பர்லைன் மூலம் மன்னர் சார்பாக அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4