இலங்கை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
#SriLanka
#LANKA4
# Ministry of Defense
#Indian
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்"மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பை வந்தடைந்தார்.
உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கி இலங்கை வந்துள்ள பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
குறிப்பாக, வலுவான கடல்சார் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நன்மை பயக்கும் துறைகள் தொடர்பில் இரு தரப்பு பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
இவ் விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளி மற்றும் புலம்பெயர் சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே